"கைது செய்ய வேண்டும் என்றால் குட்கா வழக்கில் தொடர்புடைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனை தான் கைது செய்ய வேண்டும், எங்களையல்ல", கோவையில் ஸ்டாலின் கடும் குற்றசாட்டு.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிடுவதற்கும், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக்கோரியும் நடைபெறும் ஆர்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவைக்கு விமான மூலம் வந்தார். ஸ்டாலின் சேலம் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதற்காக கோவையிலேயே கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். அதனால், கோவை கணியூர் சுங்கச்சாவடியில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் காத்திருந்தனர். 

இதனை அறிந்ததுடன், திமுகவினரும் விமான நிலையத்திலும், கணியூர் சுங்கச்சாவடியிலும் 600க்கும் மேற்பட்டோர் குவிய தொடங்கினர். இதற்கிடையே, கோவை விமான நிலையத்தில் கைதாக கூடாது என்ற ஸ்டாலினின் அறிக்கை  மேலும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. சுங்கச்சாவடி அடைந்த ஸ்டாலினை தடுப்புக்கயிர் மூலம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும் , திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கருமத்தப்பட்டி டி.எஸ்.டி. முத்தரசு கைதாவதற்கான பிடிவாரண்ட் அளித்தார். முதலில் ஏற்க மறுத்த ஸ்டாலின், பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை ஏற்று கைதானர்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவால் தான் தமிழக அரசு நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறியவர், ஆனால் டெல்லி செல்வர்கள் அங்கே குனிகிறாற்களா,,காலில் விழுகிறார்களா? என்பது தெரியவில்லை என்று விமர்சித்தார். நீட் விவகாரத்தில் திமுகவால் தான் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கிறது.அமைதியாக நடக்கவிருந்த நீட் தேர்விற்கான போராட்டத்தை தடுப்பதே எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் 300 கோடி ரூபாய் குளங்களை தூர்வார ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எங்கள் பணியையும் சேர்த்து கணக்கீடு செய்து கொள்ளை அடித்த அமைச்சர்கள், அவர்களுக்கு துணைப்போன அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்தவர், கொடநாடு வழக்கை திசைதிருப்பவே வளர்மதி,திருமுருகன் காந்தி ஆகியோர் மீது குண்டர் சட்டம், திமுகவினர் கைது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டினார். 

பின்னர்,தேர்தல் நேரத்தில் ரூ. 570 கோடியை பிடிக்க முடியாதவர்கள் எங்களை கைது செய்வதா என்றும், அப்படி கைது செய்ய வேண்டும் என்றால் குட்கா வழக்கில் தொடர்புடைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனை தான் கைது செய்ய வேண்டும் என்று எஸ்.பி.யிடம் காரச்சாரமாக வாக்குவாதத்தில் ஸ்டாலின் ஈடுபட்டார்.

அவருடன்,சுப்புலட்சுமி ஜெகதீசன், வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பைந்தமிழ் பாரி, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் கைதாகவும், சேலத்தில் நடைபெறும் நீட் ஆர்பாட்டத்தில் பங்கேற்க செல்ல ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, நிர்வாகிகள் கைதாகாமல் சேலம் செல்கின்றனர். கைதானவர்களை கணியூர் சுங்கச்சாவடி அருகிலுள்ள ரங்கா மஹாலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தினால் கணியூர் சுங்கச்சாவடியில் சுமார்  ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...